எகிப்து நாடு சுமார் நான்கரை பில்லியன் டாலர் மதிப்பில் அதிவேக ரயில் பாதையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
மின்மயமாக்கப்பட்ட இந்த ரயில் பாதை தலைநகர் கெய்ரோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களை இணைக்கும் வகையில் கட்டப்படுகிறது. இதற்காக ஜெர்மன் நிறுவனமான சீமன்ஸ் மொபிலிட்டி என்ற நிறுவனத்துடன் எகிப்து அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
சுமார் ஆயிரத்து 800 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த ரயில் பாதையில் முதற்கட்டமாக 600 கிலோ மீட்டர் தூரத்தை உருவாக்கி அதனை சூயஸ் கால்வாயுடன் இணைக்கும் வகையில் ரயில் பாதை கட்டப்படுகிறது.