அசாமைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுவன் தனது தந்தையின் கொலைக்கு நீதி வழங்கக் கோரிப் பிரதமருக்கு டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளான்.
அசாமின் சில்ச்சாரைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் செய்துல் ஆலம் லஸ்கரை 2016 டிசம்பரில் மணல்கடத்தல்காரர்கள் இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றனர்.
இந்தக் கொலை தொடர்பாக 11 பேர் மீது வழக்குப் பதிந்த காவல்துறையினர் 9 பேரைக் கைது செய்தனர். செய்துல் கொல்லப்பட்ட போது 3 மாதக் குழந்தையாக இருந்த அவர் மகன் ரிஸ்வானுக்கு இப்போது 4 வயதாகிறது.
அந்தச் சிறுவன் தன் தந்தையின் கொலைக்கு நீதி வழங்கும்படி பேசிய வீடியோவைப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோருக்கு டுவிட்டரில் அவன் தாய் அனுப்பியுள்ளார்.