குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த மீன்பிடிப் படகில் வந்த 12 பேரை கடலோர காவல் படை ராஜ்ரத்தன் சுற்றி வளைத்தது.
விசாரணைக்காக அந்தப் படகு ஒக்கா கரைப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடலில் காற்றும் மழையுமாக இருந்த நிலையில் அந்தப் படகை கரைக்குக் கொண்டு வந்ததாக கப்பலின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புயலில் படகு வழி தவறி வந்ததா ஏதும் சதித்திட்டம் இதன் பின்னணியில் உள்ளதா என்று படகில் வந்தவர்களிடம விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.