அனைத்துத் தீர்ப்பாயங்களில் உள்ள காலியிடங்களை இரண்டு வாரங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
பல்வேறு தீர்ப்பாயங்களில் காலியிடங்கள் அதிகரித்துள்ளதையடுத்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது. தீர்ப்பாயங்களைக் கலைத்து விடப் போவதாகவும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு மத்திய அரசு அனைத்து காலியிடங்களையும் நிரப்ப உத்தரவு பிறப்பிக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளது.