மெக்ஸிகோவில் பெண்கள் கருகலைப்பு செய்துக்கொள்வது குற்றமாகாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.
உச்சநீதிமன்ற வளாகம் முன் திரண்ட அடிப்படைவாதிகள் மற்றும் சில மத குழுக்கள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கதோலிக்க தேவாலய விதிகளுக்கு எதிரானது எனக் கூறி எதிர்பை வெளிப்படுத்தினர்.
மெக்ஸிகோவில் கருகலைப்பு செய்துக்கொண்ட நூற்றுக்கணக்கான பெண்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர்களில் பல பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பெண்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன.