மகாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிய பக்தர் ஒருவர் 10 கிலோ எடை கொண்ட தங்க மகுடத்தை விநாயகருக்கு அணிவித்து அழகு பார்த்தார்.
புனேயின் ஹல்வாய் கணேசா சிலைக்கு அவர் தங்க மகுடத்தை அர்ப்பணித்தார்.தமது பெயரை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டாம் என்று கோவில் நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்ட அவர் பிள்ளையாரை வணங்கி சென்றுவிட்டார்.
இந்த ஆண்டு அந்தக் கோவிலில் விலையுயர்ந்த அந்த தங்க மகுடம் பக்தர்களைக் கவர்ந்துள்ளது.