பாகிஸ்தான் உளவுத்துறைத் தலைவர் பைஸ் ஹமீது சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் உளவுத்துறைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐயின் தலைவர் பைஸ் ஹமீது நேற்று இஸ்லாமாபாத்தில் சீனா, ரஷ்யா, ஈரான், உஸ்பெகிஸ்தான், தஜிக்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளின் உளவுத்துறைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்தும், மண்டலத்தில் அமைதியும் அரசியல் நிலைத்தன்மையும் நீடிக்க வேண்டியதன் தேவை குறித்தும் அவர்கள் பேசியதாகக் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றுவதற்குப் பாகிஸ்தான் உதவியதாகப் பலரும் கூறிவரும் நிலையில், பாகிஸ்தான் உளவுத்துறை நடத்தியுள்ள இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.