கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கடந்த ஆண்டு நிகழ்ந்த விமான விபத்து தொடர்பான 257 பக்கங்கள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விமானியின் கவனக் குறைவே விபத்துக்குக் காரணம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையிறக்காமல் வட்டமிட்டபடி இருக்கும்படி விடப்பட்ட விமான நிலையத்தின் கட்டளையை மதிக்காமல் விமானி தன்னிச்சையாக விமானத்தை தரையிறக்க முடிவெடுத்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 75க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இரு விமானிகளும் இந்த விபத்தில் பலியாகினர்.