ஆங்கிலத்தில் மம்மி, டாடி என அழைப்பதை விட தாய் மொழியில் அம்மா, அப்பா என்று அழைக்கும் போது அன்பு அதிகரிக்கும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற தமிழ் பயிற்றுமொழி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், குழந்தை பருவத்தில் தாய் மொழியில் கல்வி கற்க வேண்டும் என்றும், அதே சமயம் கூடுதலாக மற்றொரு மொழியும் கற்று கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
மேலும், அனைவரும் தமிழ் மொழியில் தான் பெயர் வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.