ஒரு சமூகத்தினரை பற்றி அவதூறாக பேசினார் என்பதற்காக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலின் தந்தை 86 வயதான நந்த குமார் பாகல் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்ப ப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் வைத்து கிராமத்தினரிடம் பேசிய அவர் குறிப்பிட்ட சமூகத்தினரை புறக்கணிக்க வேண்டும் என கூறியதுடன், வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து நம்மை தீண்டத்தகாதவர்களாக நடத்துவதுடன் நமது உரிமைகளையும் பறித்து விட்டதாக கண்டித்தார்.
அந்த சமூகத்தினரை கிராமங்களுக்குள் அனுமதிக்க கூடாது என்றும் அவர் பேசியது குறித்தும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ரெய்ப்பூர் நீதிபதி உத்தரவிட்டார்.
தந்தையின் பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் அவரது பேச்சை அலட்சியப்படுத்த முடியாது என்பதுடன் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால் அவரை கைது செய்துள்ளதாக முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்தார்.