நாக்பூரில் கொரோனா 3 ஆம் அலை வீசத் துவங்கி உள்ளதாக மகாராஷ்டிர மாநில அமைச்சர் நிதின் ராவத் தெரிவித்துள்ளார்.
செடம்பர் அல்லது அக்டோபரில் கொரோனா 3 ஆம் அலை வீசும் என நிபுணர்கள் கணித்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், நாக்பூரில் இரட்டை இலக்கத்தில் கொரோனா தொற்று பதிவாகி வருவதால் அங்கு 3 ஆம் அலை வீசத் துவங்கி விட்டதாக கூறினார்.
இது குறித்து நாக்பூரில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், விரைவில் அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று அதிகரிப்பதால், நாக்பூரில், தொற்று உறுதியான அனைவரும் மருத்துவமனை அல்லது ஹோட்டல்களில் கட்டாய குவாரன்டைனில் இருக்க வேண்டும் என நாக்பூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.