சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள Grove பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அப்பள்ளி ஒரு வாரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிக்கு கொரோனா உறுதியானதால், அப்பள்ளியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு மாநகராட்சி துணை ஆணையர் மனிஷ் நேரில் ஆய்வு செய்தார்.
மேலும், மாணவியுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 103 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.