ஆப்கானிஸ்தானில் ஆறுமாத கர்ப்பிணியான போலீஸ் அதிகாரி பானு நிகாராவை அவரது குடும்பத்தினரின் கண்முன்னேயே தாலிபான்கள் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
Ghor மாகாணத்தில் நடந்த இந்த சம்பவத்தில் ஆப்கான் காவல்துறையில் பணிபுரியும் பானு நிகாரா என்ற கர்ப்பிணியை அவரது குழந்தைகள் மற்றும் கணவர் கண் முன்னேயே தாலிபான்கள் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று தாலிபான்கள் உறுதி அளித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதனிடையே, அந்த கர்ப்பினி போலீஸ் அதிகாரியை தாலிபான்கள் கொல்லவில்லை என்றும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தாலிபான் செய்தி தொடர்பாளர் Zabiullah Mujaheed தெரிவித்துள்ளார்.