உத்தரப்பிரதேசத்தின் கவுதம் புத்தா நகர் மாவட்ட ஆட்சியர் சுகாஸ் யதிராஜ் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் அவர் பிரெஞ்சு வீரர் லூக்காசை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் 15க்கு 21, 21க்கு 17, 21க்கு 15 என்கிற செட் கணக்கில் லூக்காஸ் வெற்றிபெற்றுத் தங்கப்பதக்கம் வென்றார்.
இரண்டாமிடம் பெற்ற இந்திய வீரர் சுகாஸ் யதிராஜ் வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ள முதல் ஐஏஎஸ் அதிகாரி என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். பணியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கும் அவருக்கு நாடே நன்றிதெரிவிப்பதாகப் பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.