பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது, சிவாலயத்தில் காலணியுடன் நடந்து சென்றதாக நடிகை திரிஷா மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மத்தியபிரதேசத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஹரிகேஷ்வர் பகுதியில் உள்ள நர்மதை நதிக்கரையில் திரிஷா படகில் வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது, படகில் இருந்து இறங்கிய திரிஷா கரையில் உள்ள சிவாலயத்தில் நந்தி- சிவலிங்கம் இடையே காலணியுடன் நடந்து வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நடிகை திரிஷா மற்றும் இயக்குநர் மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து அமைப்பினர் ஹரிகேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.