சீனா தங்களது மிக முக்கியமான கூட்டாளி என தெரிவித்துள்ள தாலிபன்கள், ஆப்கனை மறுசீரமைக்கவும், அங்கு கொட்டிகிடக்கும் காப்பர் கனிமத்தை வெட்டி எடுக்கவும் சீனாவை அனுமதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோட் வர்த்தக தொழில்வட பாதை திட்டத்தை ஆதரிப்பதாகவும் இத்தாலி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தாலிபன்களின் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். நவீன தொழிற்சாலகளை அமைத்து ஆப்கனின் காப்பர் கனிம தொழிலை சீனா மேம்படுத்தும் என அவர் கூறினார்.
ஆப்கனின் உறபத்தி பொருட்களை உலகிற்கு விற்கும் சந்தையாகவும் சீனா இருக்கும் என அவர் தெரிவித்தார். சீனாவைப் போன்று ரஷ்யாவும் தாலிபன்களின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.