நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக திமுக வேட்பாளர் எம்.எம். அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதற்கான சான்றிதழை சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், சட்டப்பேரவை செயலருமான சீனிவாசனிடம், அப்துல்லா பெற்று கொண்டார்.
அப்போது மூத்த அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்துல்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் இரண்டு மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளது. இதற்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.