டெல்லியை அடுத்த நொய்டாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொன்று வீட்டில் குழி தோண்டி புதைத்த கணவர் ராகேஷ் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
தனது மகள் இரண்டு குழந்தைகளுடன் தனது மருமகனால் கடத்தப்பட்டார் என்று பெண்ணின் தந்தை புகார் அளித்திருந்தார். ஆனால் காவல்நிலைய பதிவில் ராகேஷ் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ராகேஷ் உயிருடன் இருப்பதாக 3 ஆண்டுகள் கழித்து தெரிய வந்துள்ளது.
காஸ்கஞ்ச் போலீசார் கணவரிடம் நடத்திய விசாரணையில் தனது குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.