தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நிர்வாகம் அனைத்து மாநிலங்களும் உற்றுநோக்கும் விதத்தில் உள்ளது என ஜனசேனா கட்சித் தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் பாராட்டியுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பவன் கல்யாண், எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது என்பதை மு.க.ஸ்டாலின் தனது செயல்களால் தொடர்ந்து நிறைவேற்றிவருவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நிர்வாகமும், அவரது அரசின் செயல்பாடுகளும் தமிழகத்திற்கு மட்டுமின்றி, நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் உள்ளது என பவன் கல்யாண் பாராட்டியுள்ளார்.