தலைநகர் டெல்லியில் 17 மாதங்களுக்கு பிறகு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.
கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, டெல்லியில் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. உடல் வெப்ப பரிசோதனை, கிருமிநாசினி பயன்படுத்துவது உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், பள்ளிகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே மாணவர்கள் அமர வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.