ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரைக் நடிப்பில் வெளிவர உள்ள நோ டைம் டு டை படத்தின் இறுதி டிரைலர் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டே படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. வரும் அக்டோபர் 8ஆம் தேதி தியேட்டரில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் இறுதி டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.