ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளின் கடைசி துருப்புக்கள் புறப்படும் நேரத்தில் விமானநிலையத்தை நோக்கி ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கனில் இருந்த அமெரிக்க வீரர்களின் கடைசி அணி காபூல் விமானநிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்டது. அப்போது அமெரிக்க வீரர்களைக் குறி வைத்து அடுத்தடுத்து 5 ராக்கெட்டுகள் வீசப்பட்டன. விமான நிலையத்தை நோக்கி ஏவப்பட்ட ஐந்து ராக்கெட்டுகளில், மூன்று இலக்கு தவறிவிட்டது.
ஒன்று அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது, ஐந்தாவது ராக்கெட் விமான நிலைய வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயமில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.