இங்கிலாந்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும்ம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள் இறுதியில் கடற்பகுதியில் சூழ்ந்து அதனால் லட்சக்கணக்கான மீன்கள் கடல் வாழ் உயிரிகள் இறப்பதாகவும் பல்வேறு வகை பறவைகள் மற்றும் விலங்குகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் ஒருமுறை பிளாஸ்டிக் பொருட்கள் தடை அறிவிக்கப்படும் என சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புறத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.