தீவிரவாதத்தை வளர்த்து விடும் பாகிஸ்தான் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருக்கும் நிலையில் அவை தீவிரவாதிகளின் கைகளுக்கு கிடைக்காது என்பதை உலக நாடுகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தாலிபனை ஒருபோதும் நம்ப முடியாது என்றும் ஜான் பால்டன் எச்சரித்துள்ளார்.