உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியுடன் எடுத்த வீடியோ காட்சி சமூக ஊடகத்தில் வைரலாகியது.
இதனையடுத்து மேலதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தப் பெண் கான்ஸ்டபிளை இடைநீக்கம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்தனர். காவல்துறையிடம் துப்பாக்கி இருப்பது உயிர்களைக் காக்கவும் தற்காப்புக்காகவும் மட்டும்தான் என்பதை போலீசார் மறந்துவிடக்கூடாது என்று உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.