கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் புதிய உத்திகளைக் கையாள்வதாக வருவாய் உளவுத்துறை இயக்குனரக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பெங்களூர் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வந்த ஆப்பிரிக்க நாட்டு பயணியை காத்திருந்து மடக்கிய அதிகாரிகள் அவரை சோதனையிட்டனர். மருத்துவ சிகிச்சைக்காக வந்ததாக அவர் கூறிய நிலையில் அவர் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றுக்குள் 1 கிலோ 300 கிராம் கோகய்ன் போதைப் பொருள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
இதே போல் டிராலி வண்டி ஸ்க்ரூக்களை தங்கத்தால் செய்து கடத்துவது போன்ற பல நூதன வழிகளை கடத்தல் பேர்வழிகள் கையாண்டு வருகின்றனர்