பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., படிப்புகளில் சேர ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பித்த அனைவருக்கும் ரேண்டம் எண்கள் வெளியிடப்பட்டது. ரேண்டம் எண்களை மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டதால், பெரும்பாலானோர் அதிக மதிப்பெண்களுடன் அதிக கட் - ஆப் பெற்றுள்ளனர்.
இதனால், கலந்தாய்வை நடத்தும் போது ஒரே மாதிரியான கட் - ஆப் பலருக்கும் வர வாய்ப்பு உள்ளதால், கணிதம், இயற்பியல், விருப்பப் பாட மதிப்பெண்கள், 12-ம் வகுப்பு மொத்த மதிப்பெண், பிறந்த தேதி, ரேண்டம் எண் இவற்றுடன் 10-ம் வகுப்பு மதிப்பெண்ணையும் கணக்கில் கொண்டு சேர்க்கையில் முன்னுரிமை வழங்கிட வேண்டும் என்று புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.