கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வரும் ஒன்றாம் தேதி திறக்கப்படும் என தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மாணவர்கள் யாருக்காவது கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, நோய் தொற்று உறுதியானால் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.
பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களும் முக கவசம் அணிவதுடன் சமூக இடைவெளி மற்றும் சானிடைசரை பயன்படுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.