பிரபல மலையாள நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்மூட்டிக்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது.
இதன் மூலம் அடுத்த பத்து வருடங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மம்முட்டி மற்றும மோகன் லால் ஐக்கிய அரபு அமீரகம் சென்று வரலாம். கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நீண்ட நாள் வசிக்கவும், தொழில் மேற்கொள்ளவும் ஏதுவாக கோல்டன் விசா வழங்கப்படுகிறது.
பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், சஞ்சய் தத், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் ஏற்கனவே இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஆயுர்வேத மருத்துவரான நஸ்ரின் பேகம் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், முதன்முறையாக மலையாள திரையுலகில் இருந்து மோகன்லால், மம்மூட்டிக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.