லெபனானில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
2 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக அந்நாட்டு அரசு 66 சதவீதம் விலையேற்றியதால், கள்ளச்சந்தை புழக்கம் அதிகரித்து எரிபொருள் பதுக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தெற்கு லெபனான், தலைநகர் பெய்ரூட் நகர சாலைகளில் நூற்றுக்கணக்கான கார்கள் எரிபொருளின்றி அணிவகுத்து நிற்கின்றன. எரிபொருள் நிலையங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விநியோகம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.