காபூல் விமான நிலையத்தை நோக்கி வருவதைத் தவிர்க்குமாறு அமெரிக்க மக்களுக்கு அந்நாட்டு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலைய வாசலில் பெரும் ஆபத்து நேரிடலாம் என்றும் அமெரிக்கா தனது குடிமக்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்து கவனமாக இருக்குமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அரசு பிரதிநிதிகளிடமிருந்து அழைப்பு வரும் வரை விமான நிலையம் நோக்கி வர வேண்டாம் என்றும் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.