உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் லக்னோ மருத்துவமனையில் காலமானார்.
1991 - 1992 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசின் முதலமைச்சராக இருந்தவர் கல்யாண் சிங். 1992 டிசம்பர் ஆறாம் நாள் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அதைத் தடுக்கத் தவறியதாகக் கூறி இவரது ஆட்சி கலைக்கப்பட்டது.
2014 - 2019 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் இருந்தார். முதுமை, உடல்நலக் குறைவு காரணமாக லக்னோ சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கல்யாண் சிங் காலமானார்.
அவரது மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.