நீட் தேர்வெழுதுவோர் தாங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையம் குறித்த தகவல்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வருகிற 12-ந் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதப் போகும் மையம் குறித்த தகவலை முன்கூட்டியே அறிந்து கொள்ள ஏற்பாடு செய்துள்ள தேசிய தேர்வு முகமை, அவற்றை https://neet.nta.nic.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, OMR தாளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது பற்றிய தகவலையும் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் எனவும், விரைவில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.