மகப்பேறு விடுப்பு வழங்கும்போது, பணி வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையில் எந்த பாகுபாடும் காட்ட கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அரசாணை பிறப்பிக்கப்பட்டும், பல மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், தற்காலிக பெண் பணியாளர்கள், மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரிய விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக மனுதாரர் கூறியிருந்தார். பணி வரன்முறைப்படுத்தப்படாத, தற்காலிக பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பை ஊதியத்துடன் வழங்க உத்தரவிடுமாறு மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி அமர்வு, மகப்பேறு விடுப்பு வழங்குவதில் அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு இடையே எந்த பாரபட்சமும் காட்டக் கூடாது என அறிவுறுத்தி, ஒரே மாதிரியாக மகப்பேறு விடுப்பு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது.