ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் சின்னம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 23 மீட்டர் அகலமும், 17 மீட்டர் நீளமும் கொண்ட இந்த சின்னம், ஓடைபா மரைன் பூங்காவிற்கு முன்பு, 3 இழுவைப் படகுகள் மூலம் இழுத்து வரப்பட்டது. இரவில் ஒளிரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பாரா ஒலிம்பிக் சின்னம், போட்டிகள் முடியும் வரை ரெயின்போ பாலம் அருகே காட்சிக்கு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.