அஸ்ஸாம் -மீசோரம் எல்லைப் பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதால் எல்லையில் இரு மாநில பாதுகாப்புப் படையினரும் எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.
உயர் அதிகாரிகள் எல்லையை ஆய்வு செய்தனர். தாராசிங் மலைப் பகுதியில் அஸ்ஸாம் போலீசாருக்கும் மீசோரத்தை சேர்ந்த அடையாளம் தெரியாத சிலருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை பிற்பகல் மோதல் வெடித்தது.
இதையடுத்து அஸ்ஸாம் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி வன்முறையாளர்களை விரட்டியடித்தனர்.