அதிநவீன ஆயுதங்களுடன் தாலிபான்களின் கமாண்டோ படை செயல்பட்டு வருவது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சாதாரண குர்தா, தோளில் தொங்கும் ஏகே 47 ரக துப்பாக்கி ஆகியவற்றுடன் வலம் வந்த தாலிபான்களின் சிறப்பு படைப் பிரிவு உலகிற்கு தெரியவந்துள்ளது. குண்டு துளைக்காத ஆடைகள், இரவிலும் தெளிவாகப் பார்க்கும் கண்ணாடி, அதி நவீன துப்பாக்கிகள், தலைக் கவசம் என அமெரிக்க வீரர்களுக்கு நிகராக இவர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பத்ரி 313 என இந்த படைப் பிரிவுக்கு பெயரிடப்பட்டுள்ளது.