ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, அபுதாபியில் உள்ளதாக, ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, தமது குடும்பத்தினர், மற்றும் பாதுகாப்பு ஆலோசகருடன், நாட்டை விட்டு, அஷ்ரப் கனி தப்பிச் சென்றார்.
4 கார்கள், ஹெலிகாப்டரில் ஏராளமான பணத்தையும் அவர் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியானது. முதலில் தஜிகிஸ்தான் சென்ற அஷ்ரப் கனியை, அந்நாடு ஏற்க மறுத்ததால், அங்கிருந்து ஓமன் சென்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, அபுதாபியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில், அஷ்ரப் கனியையும், அவரது குடும்பத்தினரையும் வரவேற்று, தங்க வைத்திருப்பதாக, ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்திருக்கிறது.