ஆப்கானிஸ்தானில் பெண்கள் தேர்தல் அரசியலில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்களா என்ற பெண் செய்தியாளரின் கேள்வியை கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல் தாலிபன் பிரதிநிதி ஒருவர் கேமராவை ஆஃப் செய்ய கூறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆங்கில பெண் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு தாலிபன் பிரதிநிதி பதில் சொல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் இஸ்லாமிய ஷரியத் சட்டம் அனுமதிக்கும் அளவுக்கு பெண்களுக்கு தங்களது ஆட்சியில் உரிமைகள் வழங்கப்படும் என கூறினார்.
தொடர்ந்து பெண்களுக்கான ஆட்சிஅதிகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும் போது சிரிப்பை அடக்க முடியாமல் கேமராவை ஆஃப் செய்யுமாறு கூறும் காட்சிகள் பதிவாகியுள்ளன.