அமெரிக்காவில் வெறும் கைகளால் உணவளிக்க முயன்ற பெண்ணின் கையை முதலை கடித்துக் குதறியது.
உட்டா மாகாணத்தில் உள்ள ஊர்வன மையத்தில் சிறுமி ஒருவர் தனது பிறந்த நாளை கொண்டாட வந்திருந்தார். அப்போது அங்கு கூண்டில் அடைக்கப்பட்ட முதலைக்கு அதன் காப்பாளர் உணவளிக்க முயன்றார். நொடிக்கும் குறைவான நேரத்தில் அந்த முதலை உணவளிக்க முயன்ற பெண்ணின் கையைக் கவ்வியது.
அந்தப் பெண் சுதாரிக்கும் முன் முதலை டெத் ரோல் வகையில் பெண்ணின் கையை விடாமல் கடித்திருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்றொரு காப்பாளர் போராடியும் பெண்ணின் கையை விடுவிக்க முடியவில்லை. இறுதியில் நீண்ட போராட்டத்திற்குப் பின் அந்தப் பெண் காப்பாற்றப்பட்டார்.