நாட்டைக் கைவிட்டு அவமானகரமாக தப்பிச் சென்ற முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி மீது ஆப்கான் மக்கள் முன்னிலையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.
ரத்த ஆறு ஓடுவதைத் தடுக்கவே தாம் நாட்டை விட்டு சென்றதாக அஷ்ரப் கனி கூறியிருந்த நிலையில், இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் கார்களில் பணத்தை குவியலாக அள்ளிச் சென்றதாக அவர் மீது ரஷ்யாவின் அரசு சார்பு ஊடகங்கள் குற்றம் சாட்டியிருந்தன.
ஆப்கான் மக்களுக்காக உயிரையும் துறப்பேன் என்று கூறி வந்த அஷ்ரப் கனி, நாட்டை விட்டுத் தப்பிச் சென்றது வெட்கக்கேடு என்று ஆப்கானுக்கான ரஷ்ய தூதர் ஜமீர் காபுலோவ் குற்றம் சாட்டியுள்ளார்.