ராஜஸ்தானில் எல்பிஜி எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி நெடுஞ்சாலையில் திடீரென வெடித்துச் சிதறியது.
அஜ்மீர் நோக்கி எரிபொருளை ஏற்றிக் கொண்டு ஜெய்ப்பூர், அஜ்மீர் நெடுஞ்சாலையில் அந்த லாரி சென்று கொண்டிருந்த போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த லாரி வெடித்துச் சிதறியது.
கேஸ் டேங்கர் வெடித்த சப்தம் பல கிலோ மீட்டர்களுக்கும் அப்பால் கேட்டது. இந்த வெடிப்பு காரணமாக நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள் போக்குவரத்தில் சிக்கிக் கொண்டன. கேஸ் டேங்கர் வெடிப்பில் இறப்பு எதுவும் பதிவாகவில்லை.