டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை தவற விட்ட இந்திய வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக, பொன் நிறத்திலான அல்டிராஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பதக்கங்களை அவர்கள் பெற முடியாமல் போனாலும், கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களை வென்றிருப்பதாகவும், ஊக்கமளித்து இருப்பதாகவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஒலிம்பிக் ஈட்டி எறியும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, எக்ஸ்யுவி 700 கார் பரிசாக வழங்கப்படும் என்று மகிந்திரா நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.