அமெரிக்காவில், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மக்களுக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் உருமாறிய கொரோனா டெல்டா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு தினசரி பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.
இந்நிலையில் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் செலுத்த Pfizer-BioNTech மற்றும் Moderna-வின்தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.