ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான கந்தகாரை அரசுப் படைகளிடம் இருந்து கைப்பற்றி விட்டதாகத் தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஏற்கெனவே ஆப்கனில் 75 விழுக்காட்டுக்கும் அதிகமான பகுதிகளைத் தாலிபான்கள் கைப்பற்றிவிட்டதாகவும், காபூல் உள்ளிட்ட சில நகரப் பகுதிகள் மட்டுமே அரசுப் படைகளிடம் உள்ளதாகவும், அவற்றையும் மூன்று மாதங்களுக்குள் தாலிபான்கள் கைப்பற்றிவிடக் கூடும் என்றும் பன்னாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கந்தகார் முழுவதும் கைப்பற்றப்பட்டு விட்டதாகவும், அங்குள்ள தியாகிகள் சதுக்கத்தை முஜாகிதீன்கள் அடைந்து விட்டதாகவும் தாலிபான் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.