ஒலிம்பிக் மகளிர் ஆக்கி அணியில் அங்கம் வகித்த ஆந்திர வீராங்கனை Rajani Etimarpu-க்கு 25 லட்ச ரூபாய் நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்து உள்ளார்.
தன் பெற்றோருடன் Rajani Etimarpu முதல்வர் ஜெகன் மோகனை சந்தித்தார். இந்த நிலையில் Rajani Etimarpu-வை ஊக்குவிக்கும் விதமாக ரூபாய் 25 லட்சம் ஊக்கத் தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, முந்தைய அரசில் அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகை நிலுவையை உடனடியாக வழங்குவது, ஆயிரம் கெஜம் நிலம், மாதந்தோறும் 40 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை உள்ளிட்டவகை வழங்க உத்தரவிட்டார்.