பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிகளின் பட்டியலை மாநில அரசுகளே தயாரிக்க அதிகாரமளிக்கும் அரசமைப்புச் சட்டத் திருத்த முன்வரைவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பிற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைத் தயாரிக்க மாநிலங்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் 127ஆவது திருத்தம் செய்வதற்கான முன்வரைவை மக்களவையில் அமைச்சர் வீரேந்திர குமார் அறிமுகப்படுத்தினார். இதை நிறைவேற்ற ஆதரவளிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்தன.
இதனிடையே ஆகஸ்டு 10, 11 ஆகிய நாட்களில் அவையில் இருக்க வேண்டும் என பாஜக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.