படப்பிடிப்பின் போது கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்ததில் இயக்குநரும், நடிகருமான சேரன் காயமடைந்தார்.
நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக் உடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு என்னும் படத்தின் சேரன் நடித்து வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வீட்டின் மாடியில் ஒரு காட்சி படமாக்கப்பட்ட போது, கால் தவறி சேரன் கீழே விழுந்ததில், தலையில் காயம் ஏற்பட்டு அவருக்கு தையல்கள் போடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இருப்பினும் அவர் படப்பிடிப்பை ரத்து செய்யமால் தொடர்ந்து தனது காட்சிகளை நடித்துக் கொடுத்தாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.