இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நாளை முதல் மீண்டும் பயணிகள் விமானப் போக்குவரத்தை அனுமதிக்க இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து கடந்த சில மாதங்களாக பயணிகள் விமானங்கள் வருவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்திருந்த நிலையில் தற்போது அந்தத் தடை விலக்கப்படுகிறது.
அதன்படி துபை உள்ளிட்ட விமானநிலையங்களில் இறங்கி அடுத்த விமானத்தில் தாங்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்வதற்கு பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.