ஆர்.டி.இ. எனப்படும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 8,000-க்கு மேற்பட்ட பள்ளிகளில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
ஜூலை 5 முதல் ஆக.3 வரை ஆர்.டி.இ.யின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை 73 ஆயிரத்து 86 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான கால நீட்டிப்பு வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையிலும் ஊரடங்கை கருத்தில் கொண்டும் கால அவகாசத்தை வரும் 13ஆம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.